/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சத்யன், தியா 'சாம்பியன்': தேசிய டேபிள் டென்னிசில்சத்யன், தியா 'சாம்பியன்': தேசிய டேபிள் டென்னிசில்
சத்யன், தியா 'சாம்பியன்': தேசிய டேபிள் டென்னிசில்
சத்யன், தியா 'சாம்பியன்': தேசிய டேபிள் டென்னிசில்
சத்யன், தியா 'சாம்பியன்': தேசிய டேபிள் டென்னிசில்
ADDED : செப் 11, 2025 09:24 PM

புதுடில்லி: தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடரில் சத்யன், தியா சாம்பியன் பட்டம் வென்றனர்.
டில்லியில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய (பி.எஸ்.பி.பி.,) அணியின் சத்யன் ஞானசேகரன், மேற்கு வங்கத்தின் அங்கூர் பட்டாசார்ஜி மோதினர். சத்யன் 4-1 (11-5, 11-8, 11-13, 11-7, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) அணியின் தியா சிதாலே, ரயில்வே அணியின் சுதிர்தா முகர்ஜி மோதினர். இதில் தியா 4-0 (11-9, 11-7, 11-9, 11-6) என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
'யூத்' (19 வயது) ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் அபினந்த் 4-1 (11-7, 9-11, 12-10, 11-8, 14-12) என, மேற்கு வங்கத்தின் ஒய்ஷிக் கோஷை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
'யூத்' (19 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ஹன்சினி 4-0 (11-4, 11-3, 14-12, 11-4) என, மகாராஷ்டிராவின் ஜெனிபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.