Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: அரையிறுதியில் ஷியோரன் * உலக சாம்பியன்ஷிப்பில்...

குத்துச்சண்டை: அரையிறுதியில் ஷியோரன் * உலக சாம்பியன்ஷிப்பில்...

குத்துச்சண்டை: அரையிறுதியில் ஷியோரன் * உலக சாம்பியன்ஷிப்பில்...

குத்துச்சண்டை: அரையிறுதியில் ஷியோரன் * உலக சாம்பியன்ஷிப்பில்...

ADDED : செப் 10, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் நுபுர் ஷியோரன்.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், உஸ்பெகிஸ்தானின் சோடிம்போயவா ஆல்டினாயை சந்தித்தார். இதில் நுபுர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

இந்திய வீரர் ஜடுமானி, 'ரவுண்டு-16' போட்டியில் பிரிட்டனின் ரீஸ் ரெட்ஷாவை சந்தித்தார். இதில் ஜடுமானி 5-0 என்ற கணக்கில் ஒரு மனதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

48 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய வீராங்கனை மீனாட்ஷி, 5-0 என சீனாவின் வாங் குயுபிங்கை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us