/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கடைசி நிமிடத்தில் வீழ்ந்தது குஜராத் * புரோ கபடி லீக் போட்டியில்கடைசி நிமிடத்தில் வீழ்ந்தது குஜராத் * புரோ கபடி லீக் போட்டியில்
கடைசி நிமிடத்தில் வீழ்ந்தது குஜராத் * புரோ கபடி லீக் போட்டியில்
கடைசி நிமிடத்தில் வீழ்ந்தது குஜராத் * புரோ கபடி லீக் போட்டியில்
கடைசி நிமிடத்தில் வீழ்ந்தது குஜராத் * புரோ கபடி லீக் போட்டியில்
ADDED : செப் 23, 2025 10:55 PM

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30-29 என 'திரில்' வெற்றி பெற்றது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
நேற்று நடந்த லீக் போட்டியில் குஜராத், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து இரு அணிகளும் சம பலத்தில் விளையாடின. இருப்பினும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30-29 என வெற்றி பெற்றது. கடைசி நிமிடத்தில் ஏமாற்றிய குஜராத், ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் பாரத் 9, கேப்டன் விஜய் மாலிக் 7 புள்ளி எடுத்தனர். குஜராத் அணியிஜ் முகமதுரேசா அதிகபட்சம் 6 புள்ளி எடுத்தார்.