/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஷீத்தல் இரண்டாவது இடம் * உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்ஷீத்தல் இரண்டாவது இடம் * உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்
ஷீத்தல் இரண்டாவது இடம் * உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்
ஷீத்தல் இரண்டாவது இடம் * உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்
ஷீத்தல் இரண்டாவது இடம் * உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்
ADDED : செப் 23, 2025 10:08 PM

குவாங்ஜு: தென் கொரியாவின் குவான்ஜு நகரில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் 'ரீகர்வ்' போட்டியில் தகுதிச்சுற்று நடந்தன. இந்தியாவின் ஹர்விந்தர் சிங், 645 புள்ளி எடுத்து, 4வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள் சாஹில் 14 (633), தன்னா ராம் 30வது (617) இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் பூஜா, 593 புள்ளி எடுத்து 6வது இடம் பெற்றார். சரப்ஜித் கவுர் 25வது (498) இடம் பெற்றார். இரட்டையரில் பூஜா, சரப்ஜித் ஜோடி, 4வது இடம் பெற்றது.
பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, 687 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். சரியாவுக்கு 12வது (666) இடம் கிடைத்தது. பெண்கள் இரட்டையரில் ஷீத்தல், சரிதா ஜோடி 4வது இடம் பிடித்தது.
அடுத்து நடந்த பெண்கள் ஒற்றையர் ('ரீகர்வ்') முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, 7-1 என போலந்தின் ஜோலண்டாவை வீழ்த்தினார். இந்தியாவின் சரப்ஜித் கவுர், 0-6 என மங்கோலியாவின் டெம்பெரெலிடம் தோல்வியடைந்தார்.