/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பிரியங்கா தேசிய சாதனை: 35 கி.மீ., நடை போட்டியில்பிரியங்கா தேசிய சாதனை: 35 கி.மீ., நடை போட்டியில்
பிரியங்கா தேசிய சாதனை: 35 கி.மீ., நடை போட்டியில்
பிரியங்கா தேசிய சாதனை: 35 கி.மீ., நடை போட்டியில்
பிரியங்கா தேசிய சாதனை: 35 கி.மீ., நடை போட்டியில்
ADDED : மார் 23, 2025 06:46 PM

டுடின்சே: 35 கி.மீ., நடை போட்டியில் இந்தியாவின் பிரியங்கா தேசிய சாதனை படைத்தார்.
ஸ்லோவாகியாவில், 'டுடின்ஸ்கா 50' சர்வதேச நடை போட்டி 44வது சீசன் நடந்தது. பெண்களுக்கான 35 கி.மீ., நடை போட்டியில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 29, பங்கேற்றார். இலக்கை 2 மணி நேரம், 56 நிமிடம், 34 வினாடியில் கடந்த பிரியங்கா, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன், 3 மணி நேரம், 13 நிமிடம், 19 வினாடியில் கடந்தது இவரது சிறந்த செயல்பாடாக இருந்தது.
தவிர பிரியங்கா, புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன், 2023ல் ராஞ்சியில் நடந்த தேசிய ஓபன் நடை போட்டி சாம்பியன்ஷிப்பில் மஞ்சு ராணி இலக்கை 2 மணி நேரம், 57 நிமிடம், 54 வினாடியில் கடந்தது தேசிய சாதனையாக இருந்தது. ஏற்கனவே 20 கி.மீ., நடை போட்டியிலும் (ஒரு மணி நேரம், 28 நிமிடம், 45 வினாடி) தேசிய சாதனை பிரியங்கா வசம் உள்ளது.
ஆண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் (ஒரு மணி நேரம், 24 நிமிடம், 13 வினாடி) 6வது இடத்தை கைப்பற்றினார்.