/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆஸ்திரேலிய வீரர் சாம்பியன்: சீன 'பார்முலா-1' கார்பந்தயத்தில்ஆஸ்திரேலிய வீரர் சாம்பியன்: சீன 'பார்முலா-1' கார்பந்தயத்தில்
ஆஸ்திரேலிய வீரர் சாம்பியன்: சீன 'பார்முலா-1' கார்பந்தயத்தில்
ஆஸ்திரேலிய வீரர் சாம்பியன்: சீன 'பார்முலா-1' கார்பந்தயத்தில்
ஆஸ்திரேலிய வீரர் சாம்பியன்: சீன 'பார்முலா-1' கார்பந்தயத்தில்
ADDED : மார் 23, 2025 06:44 PM

ஷாங்காய்: சீன 'பார்முலா-1' கார்பந்தயதில் ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
நடப்பு ஆண்டுக்கான 'பார்முலா--1' கார்பந்தய உலக சாம்பியன்ஷிப், 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் 2வது சுற்று நடந்தது.
இதன் 'பைனல் ரேஸில்', இலக்கை ஒரு மணி நேரம், 30 நிமிடம், 55.026 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம் பிடித்து கோப்பை வென்றார். இது, இவரது 3வது சாம்பியன் பட்டம். கடந்த ஆண்டு ஹங்கேரி, அஜர்பெய்ஜானில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
மற்றொரு 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணி வீரர் பிரிட்டனின் லாண்டோ நோரிஸ், 2வது இடம் பிடித்தார். இவர், சமீபத்தில் மெல்போர்னில் நடந்த முதல் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மூன்றாவது இடத்தை 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரசல் கைப்பற்றினார்.
'நடப்பு உலக சாம்பியன்' மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ('ரெட் புல் ரேஸிங் ஹோண்டா'), லீவிஸ் ஹாமில்டன் ('பெராரி') முறையே 4, 6வது இடம் பிடித்தனர்.