/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய அணியினர்ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய அணியினர்
ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய அணியினர்
ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய அணியினர்
ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய அணியினர்
ADDED : ஜூலை 20, 2024 11:19 PM

பாரிஸ்: இந்தியாவின் வில்வித்தை, படகுபோட்டி அணியினர் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தை அடைந்தனர்.
பிரான்சின் பாரிசில் வரும் 26ல் 33வது ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ளது. இந்தியா சார்பில் 117 பேர் பங்கேற்க உள்ளனர். இந்திய குழு தலைவராக, ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் வெண்கலம் (2012) வென்ற முன்னாள் வீரர் ககன் நரங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள இவர் கூறியது:
பாரிஸ் ஒலிம்பிக் இந்திய அணி தலைவராக உள்ளது பெருமையான விஷயம். தற்போது முதல் நபராக ஒலிம்பிக் கிராமம் வந்துள்ளேன். இங்கு இந்திய நட்சத்திரங்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்தேன். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதாக என உறுதிப்படுத்தி வருகிறேன்.
முதல் அணியாக வில்வித்தை, படகுபோட்டி வீரர், வீராங்கனைகள் வந்து சேர்ந்தனர். நேற்று இந்திய ஹாக்கி அணியினர் பாரிஸ் வந்தனர். நமது நட்சத்திரங்களின் மனநிலை உற்சாகமாக உள்ளன.
என்னைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக் வீரராக களமிறங்கிய நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. இப்போதுள்ள இந்திய அணியில் பதக்கம் வெல்லும் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெருமை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
14,500 பேர்
ஒலிம்பிக் கிராமம் 54 'ஹெக்டேர்' நிலப்பரப்பில் மூன்று பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.
* 9,000 விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட 14,500 பேர் தங்கும் வசதி உள்ளன.
* மல்யுத்தம், பளுதுாக்குதல் உட்பட 7 விளையாட்டு பயிற்சி மையம் உள்ளன.
* ஒவ்வொரு அறையிலும் 2 பேர் தங்குவர்.
* ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவில் 80 சதவீத மைதானம் உள்ளன. இதனால் 30 நிமிடத்தில் மைதானம் செல்லலாம். இதற்காக பஸ் வசதி உள்ளது.
* போட்டி முடிந்ததும் ஒலிம்பிக் கிராமம் 2,800 வீடுகளாக மாற்றப்பட உள்ளன.
500 வகை உணவு
வீரர், வீராங்கனைகளுக்காக 500 வகையான உணவுகள் ஒலிம்பிக் கிராமத்தில் தயாராக உள்ளன. 6 'ரெஸ்டாரென்ட்' உள்ளன. 200 'செப்' பணியில் உள்ளனர்.
* ஒரே நேரத்தில் 3,200 பேர் அமர்ந்து சாப்பிடும் வசதி உள்ளது.