/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாராலிம்பிக் புரவலர் வானதி சீனிவாசன்பாராலிம்பிக் புரவலர் வானதி சீனிவாசன்
பாராலிம்பிக் புரவலர் வானதி சீனிவாசன்
பாராலிம்பிக் புரவலர் வானதி சீனிவாசன்
பாராலிம்பிக் புரவலர் வானதி சீனிவாசன்
ADDED : ஜூன் 14, 2024 11:29 PM

புதுடில்லி: இந்திய பாராலிம்பிக் (மாற்றுத்திறனாளிக்கான) கமிட்டியின் (பி.சி.ஐ.,) தலைமை புரவலராக, கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து பி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியா முழுவதும் பாராலிம்பிக் போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எங்களது லட்சியத்துக்கு வானதி சீனிவாசனின் அனுபவம் கைகொடுக்கும். சமூக பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இது எங்களது வளர்ச்சிக்கு உதவும்.
பாராலிம்பிக் அரங்கில் லட்சியங்களை அடைய, இவரது தலைமைப் பண்பு, திறமை கைகொடுக்கும். இவர், தலைமை புரவலர் பதவியை ஏற்றது, இந்திய பாராலிம்பிக்கில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.