ADDED : ஜூன் 14, 2024 11:14 PM

புதுடில்லி: சர்வதேச குத்துச்சண்டை போட்டி இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார் லவ்லினா.
செக் குடியரசில் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் லவ்லினா உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். 75 கிலோ பிரிவில் 4 பேர் பங்கேற்கின்றனர். போட்டி 'ரவுண்டு ராபின்' முறையில் நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, முதல் போட்டியில் பிரிட்டனின் ரீடுவை வீழ்த்தினார்.
இரண்டாவது போட்டியில் லவ்லினா, அகதிகள் அணி சார்பில் பங்கேற்கும் கேமரூனை சேர்ந்த சிண்டி நிகம்பாவை சந்தித்தார். இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். அடுத்து கடைசி போட்டியில் சீனாவின் வலிமையான லி குயானுடன் மோதுகிறார். 2023 ஆசிய விளையாட்டு பைனலில் லவ்லினாவை, லி குயான் வீழ்த்தினார். இம்முறை லவ்லினா வெல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.