/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ துப்பாக்கி சுடுதல்: அர்ஜுன் நான்காவது இடம் * நழுவியது வெண்கலம் துப்பாக்கி சுடுதல்: அர்ஜுன் நான்காவது இடம் * நழுவியது வெண்கலம்
துப்பாக்கி சுடுதல்: அர்ஜுன் நான்காவது இடம் * நழுவியது வெண்கலம்
துப்பாக்கி சுடுதல்: அர்ஜுன் நான்காவது இடம் * நழுவியது வெண்கலம்
துப்பாக்கி சுடுதல்: அர்ஜுன் நான்காவது இடம் * நழுவியது வெண்கலம்
ADDED : ஜூலை 29, 2024 11:15 PM

சாட்டியாரக்ஸ்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் நான்காவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டார் அர்ஜுன்.
பிரான்சில் 33வது ஒலிம்பிக் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பைனல் நடந்தது. இதில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா, துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார் அர்ஜுன். முதல் 10 வாய்ப்பு முடிவில் 3வது இடத்தில் இருந்தார். அடுத்து 'எலிமினேஷன்' சுற்று நடந்தன.
குறைவான புள்ளிக்கு ஏற்ப, ஒவ்வொருவராக வெளியேறினர். 14 சுற்று முடிவில் அர்ஜூன் (146.9) 2வது இடத்துக்கு முன்னேற, பதக்க வாய்ப்பு அதிகரித்தது. 18 சுற்றில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அடுத்த இரு சுற்றில் சிறப்பாக செயல்பட்டால் குறைந்தபட்சம் வெண்கலம் உறுதி என்ற நிலையில், அர்ஜுன் தடுமாற, 208.4 புள்ளியுடன் நான்காவது இடம் பெற்றார். 0.9 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் நழுவவிட்டார். சுவீடனின் விக்டர் (209.3) 3வது இடம் பிடித்தார்.
சீனாவின் லிஹாவோ (252.2), விக்டர் (251.4), குரோஷியாவின் மரிசிச் (230.0) முதல் இரண்டு இடம் பெற்றனர்.
ரமிதா ஏமாற்றம்
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' தனிநபர் பைனலில் இந்தியாவின் ரமிதா பங்கேற்றார். முதலில் 10 சுற்று வாய்ப்பு தரப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டால் பதக்க வாய்ப்பை அதிகரிக்கலாம் என்ற நிலையில் முதல் 9 சுற்றில் சிறப்பாக செயல்பட்ட ரமிதா, 94.3 புள்ளிடன் 4வது இடத்தில் இருந்தார். 10 வது சுற்றில் 9.7 என குறைவான புள்ளி எடுக்க, 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அடுத்து நடந்த 'எலிமினேஷன்' போட்டியில் 7வது இடம் (145.3) பெற்றார் ரமிதா.
பைனலில் இந்திய ஜோடி
10 மீ., ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் மனு பாகர்-சரப்ஜோத் சிங், ரிதம் சங்வான்-அர்ஜுன் சிங் களமிறங்கினர். 'டாப்-4' இடம் பிடித்தால் மட்டுமே பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கலாம். இதில் மனுபாகர்-சரப்ஜோத் ஜோடி 580 புள்ளி எடுத்து 3வது இடம் பிடித்தது. ரிதம்-அர்ஜுன் சிங் ஜோடி 576 புள்ளியுடன் 10 வது இடம் பிடித்து வெளியேறியது.
இன்று நடக்கும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் 3வது இடம் பெற்ற மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி, 4வது இடம் பெற்ற தென் கொரியாவின் ஓ யே ஜின், வான்ஹோ ஜோடி மோதுகின்றன.
தமிழக வீரர் ஏமாற்றம்
ஆண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 'டிராப்' பிரிவு தகுதிச்சுற்று நேற்று நடந்தன. தமிழகத்தின் பிரித்விராஜ் 37, பங்கேற்றார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கிய இவர், துவக்கத்தில் சற்று ஆறுதல் தந்தார். 3வது சுற்றில் 21 புள்ளி மட்டும் எடுத்தார். முதல் நாள் முடிவில் 68 புள்ளி மட்டும் எடுக்க, கடைசி இடத்துக்கு (30 வது) தள்ளப்பட்டார்.
இதற்கு முன்...
ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் நான்காவது இடம் பிடித்த மூன்றாவது இந்தியர் ஆனார் அர்ஜுன். முன்னதாக 2012ல் (லண்டன்) ஜாய்தீப் கர்மாகர் (50 மீ., ரைபிள் புரோன்), 2016ல் (ரியோ) அபினவ் பிந்த்ரா (10 மீ., ஏர் ரைபிள்) இதுபோல, நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தனர்.