/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய 'குதிரை' * அனுஷ் அகர்வாலா சாதனைபாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய 'குதிரை' * அனுஷ் அகர்வாலா சாதனை
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய 'குதிரை' * அனுஷ் அகர்வாலா சாதனை
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய 'குதிரை' * அனுஷ் அகர்வாலா சாதனை
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய 'குதிரை' * அனுஷ் அகர்வாலா சாதனை
ADDED : ஜூலை 19, 2024 10:57 PM

புதுடில்லி: ''எனது வெற்றியில் முழு பங்கு வகிப்பது குதிரை தான். இது மட்டும் சரியாக இல்லை எனில் எதுவும் செய்ய முடியாது,'' என குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26ல் துவங்க உள்ளது. இதில் களமிறங்கும் அனுஷ் அகர்வாலா 24, ஒலிம்பிக் குதிரையேற்ற போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என வரலாறு படைத்துள்ளார்.
கோல்கட்டாவில் பிறந்த அனுஷ், 17 வயதில் ஜெர்மனி சென்றார். வார இறுதி நாளில் பொழுதுபோக்கிற்காக குதிரையேற்றத்தில் ஈடுபட்டார். பின் போட்டிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.
2023 ஆசிய விளையாட்டு 'டிரஸ்சேஜ்' பிரிவில் தங்கம் (அணி), வெண்கலம் (தனிநபர்) என 2 பதக்கம் வென்று வரலாறு படைத்தார். தொடர்ந்து சர்வதேச தொடர்களில் பங்கேற்க, 67.695 புள்ளியுடன் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் ஆனார். இதையடுத்து தனது நான்கு ஆண்டு 'நண்பன்' குதிரை 'சார் கேரமெலோ'வுடன், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
அவர் கூறியது:
குதிரையேற்றத்தை பொறுத்தவரை நீங்கள் நல்ல 'ரைடராக' சிறந்த பயிற்சியாளராக இருக்கலாம். ஆனால் நமது சொல் கேட்டு நடக்கும் சரியான குதிரை இல்லை எனில் இப்போட்டியில் நாம் 'வேஸ்ட்' தான்.
சக மனிதர்களுடன் பழகுவது போல, குதிரையிடம் நட்பு வளர்க்க வேண்டும். இது சில மணி நேரம், சில நாளில் நடக்கும் விஷயம் அல்ல. இருவருக்கும் பிணைப்பு உருவாக நீண்ட நாள் தேவைப்படும். 'என் மீது எப்போதும் 100 சதவீதம் கவனம் செலுத்த வேண்டும்,' என சார் கேரமெலோ' விரும்பும். தனது முதுகில் கீறி விளையாட வேண்டும் என ஆசைப்படும்.
மைதானத்தில் களமிறங்கியதும் குதிரை முழுமையாக நமது சொல்லுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பிக்கும். அப்படியே பறப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மற்றவர் திறமையை பார்த்து பயந்து விடாமல், முழுக்கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.