/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பின்லாந்து விளையாட்டில் அபாரம்தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பின்லாந்து விளையாட்டில் அபாரம்
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பின்லாந்து விளையாட்டில் அபாரம்
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பின்லாந்து விளையாட்டில் அபாரம்
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பின்லாந்து விளையாட்டில் அபாரம்
ADDED : ஜூன் 19, 2024 12:00 AM

புதுடில்லி: பின்லாந்து ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
பின்லாந்தில் 'பாவோ நுார்மி' விளையாட்டு நடந்தது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா பங்கேற்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26-ஆக. 11) தயாராகி வரும் இவர், சமீபத்தில் தோஹா, 'டைமண்ட்' லீக் தடகளத்தில் 2 செ.மீ., வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டார்.
இம்முறை முதல் இரு வாய்ப்பில் 83.62 மீ., மற்றும் 83.45 மீ., துாரம் எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் அசத்திய இவர் 85.97 மீ., துாரம் எறிந்தார். 4வது வாய்ப்பில் 82.21 மீ., துாரம் எறிந்தார். 5வது வாய்ப்பை வீணடித்தார். 6வது, கடைசி வாய்ப்பில் 82.97 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும் முதலிடம் பிடித்த (85.97 மீ.,) நீரஜ் சோப்ரா, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.
பின்லாந்து வீரர் டோனி கெரானென், நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 84.19 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். பின்லாந்தின் மற்றொரு வீரர் ஆலிவர் ஹெலாண்டர், 83.96 மீ., துாரம் எறிந்து, வெண்கலம் வென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 82.58 மீ., துாரம் மட்டும் எறிந்து நான்காவது இடம் பிடித்து ஏமாற்றினார்.