/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: போலந்து ஈட்டி எறிதலில் அசத்தல்வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: போலந்து ஈட்டி எறிதலில் அசத்தல்
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: போலந்து ஈட்டி எறிதலில் அசத்தல்
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: போலந்து ஈட்டி எறிதலில் அசத்தல்
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: போலந்து ஈட்டி எறிதலில் அசத்தல்

சோர்சோவ்: போலந்து தடகளத்தின் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
போலந்தில் ஆர்லன் மெமோரியல் தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஜெர்மனியின் ஜூலியன் வெபர், போலந்தின் மார்சின், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் வாய்ப்பில் 'பவுல்' செய்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது வாய்ப்பில் 81.28 மீ., துாரம் மட்டும் எறிந்தார். அடுத்த இரு வாய்ப்பில் ஏமாற்றினார். 5வது வாய்ப்பில் 81.80 மீ., துாரம் மட்டும் எறிந்தார்.
ஐந்து வாய்ப்பு முடிவில் நீரஜ் சோப்ரா, மூன்றாவது இடத்தில் இருந்தார். கடைசி, ஆறாவது வாய்ப்பில் எழுச்சி பெற்ற நீரஜ் சோப்ரா, 84.14 மீ., துாரம் எறிய, இரண்டாவது இடத்துக்கு முன்னேறி, வெள்ளி வென்றார். சமீபத்தில் தோகாவில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா (90.23 மீ.,) வெள்ளி வென்றிருந்தார்.
தோகா போட்டியில் தங்கம் வென்ற ஜெர்மனியின் ஜூலியன் வெபர், நேற்றும் அசத்தினார். அதிகபட்சம் 86.12 மீ., துாரம் எறிந்த இவர், தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 83.24 மீ., துாரம் எறிந்து வெண்கலம் கைப்பற்றினார்.