/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ் அரங்கில் அசத்தும் அங்கப்பன்: சோதனை கடந்து நடுவராகி சாதனை செஸ் அரங்கில் அசத்தும் அங்கப்பன்: சோதனை கடந்து நடுவராகி சாதனை
செஸ் அரங்கில் அசத்தும் அங்கப்பன்: சோதனை கடந்து நடுவராகி சாதனை
செஸ் அரங்கில் அசத்தும் அங்கப்பன்: சோதனை கடந்து நடுவராகி சாதனை
செஸ் அரங்கில் அசத்தும் அங்கப்பன்: சோதனை கடந்து நடுவராகி சாதனை
ADDED : மே 24, 2025 10:13 PM

புதுக்கோட்டை: இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி சர்வதேச 'செஸ் ஆர்பிட்டர்' என சாதனை படைத்திருக்கிறார் அங்கப்பன்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அங்கப்பன் 27. ஒன்றரை வயதில் 'மஸ்குலர் டிஸ்டரபி' பாதிப்பு ஏற்பட, நடக்க முடியவில்லை. வீல் சேரில் மனஉறுதியுடன் முன்னேறினார். பி.காம்., பட்டம் பெற்றார். சி.ஏ., படித்து வருகிறார். செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். தற்போது, 'ஆர்பிட்டர்' அளவுக்கு உச்சம் தொட்டுள்ளார்.
அங்கப்பன் கூறியது: திருச்சியில் சிறிய அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றேன். ஆரம்பத்தில் நிதி நெருக்கடி, பயணம் செய்வதில் பிரச்னை இருந்தது. எனக்கு ஆதரவாக அப்பா, அம்மா இருந்தனர்.
சென்னை, ஒலிம்பியாட் (2022) போட்டியின் போது, 'பிடே' செஸ் 'ஆர்பிட்டர்' தேர்வில் வெற்றி பெற்றேன். பின் 'ஆன்லைனில்' சர்வதேச 'ஆர்பிட்டர்' தேர்வில் 'பாஸ்' செய்தேன். இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி 'ஆர்பிட்டர்' ஆனேன். 'ஆர்பிட்டர்' என்பது அம்பயர் போன்றது. சர்வதேச போட்டிகளில் 'ரிசல்ட்' அறிவிப்போம். செஸ் போர்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.
இலவச செஸ் பயிற்சி: சொந்தமாக செஸ் பயிற்சி அகாடமி, 'டிரஸ்ட்' துவக்கியுள்ளேன். புதுக்கோட்டையில் 2021ல் இருந்து சர்வதேச ரேட்டிங் செஸ் தொடரை நடத்துகிறேன். அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புறத்தில் உள்ளவர்கள், வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக செஸ் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் புதுக்கோட்டையில் 'ஆடிட்டோரியம்' கட்டி, செஸ் தொடரை நடத்துவதே இலக்கு. தமிழக அரசு வேலையை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அங்கப்பன் கூறினார்.