/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நாடியா சாகசம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்நாடியா சாகசம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
நாடியா சாகசம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
நாடியா சாகசம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
நாடியா சாகசம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 08, 2024 10:08 PM

கனடா தலைநகர் மான்ட்ரியலில் (1976, ஜூலை 17 -- ஆக. 1) 21வது ஒலிம்பிக் நடந்தது. இப்போட்டிக்கு முன் இனவெறி சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்காவுக்கு, நியூசிலாந்து ரக்பி அணி சென்றது. இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்க நியூசிலாந்துக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இது ஏற்கப்படாததால், 26 ஆப்ரிக்க நாடுகள் மான்ட்ரியல் ஒலிம்பிக்கை புறக்கணித்தன. தவிர, ஊக்க மருந்து பிரச்னையும் பெரிய அளவில் வெடித்தது. கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த நீச்சல் வீராங்கனைகள் 'ஸ்டீராய்ட்' பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ரஷ்யா, 49 தங்கம் உட்பட 125 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. போட்டியை நடத்திய கனடா (5 வெள்ளி, 6 வெண்கலம்) ஒரு தங்கம் கூட பெறவில்லை. ஹாக்கியில் ஏமாற்றிய இந்தியா, லீக் சுற்றோடு வெளியேறி 7வது இடம் பிடித்தது.
10 புள்ளிகள்
ருமேனியாவை சேர்ந்த 14 வயதான நாடியா கொமனேசி, ஜிம்னாஸ்டிக்சில் சாகசம் நிகழ்த்தினார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் முழுமையாக 10 புள்ளிகள் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். 'ஆல்--ரவுண்டு' உள்ளிட்ட 3 பிரிவுகளில் அசத்திய இவர் 3 தங்கம் வென்றார். இந்த நுாற்றாண்டின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக 'லாரியஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியால்' தேர்வு செய்யப்பட்டார்.