Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

ADDED : பிப் 06, 2024 09:49 PM


Google News
Latest Tamil News
டில்லி: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி, 32-25 என உ.பி., அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி., யோதாசை சந்தித்தது. துவக்கத்தில் உ.பி., அணி 10-6 என முன்னிலை பெற்றது. 10 வது நிமிடம் 'ரெய்டு' சென்ற நரேந்தர், 3 புள்ளியுடன் திரும்பி தமிழ் தலைவாஸ் அணி 9-10 என நெருங்கியது. 16 வது நிமிடத்தில் உ.பி., 'ஆல் அவுட்' செய்த தமிழ் தலைவாஸ், முதல் பாதியில் 21-16 என முந்தியது.

இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 32-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் வீரர் நரேந்தர் அதிகபட்சம் 10 புள்ளி எடுத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us