ADDED : ஜன 31, 2024 10:57 PM

பாட்னா: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 27-49 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நேற்று பாட்னாவில் நடந்த கடைசி போட்டியில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற தமிழ் தலைவாஸ் முதல் பாதியில் 17-15 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஏமாற்றியது தமிழ் தலைவாஸ் அணி, அடுத்தடுத்து ஆல் அவுட்டானது. முடிவில் 27-49 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. இருப்பினும் முதல் பாதியில் பெங்களூரு அணி 16-13 என முந்தியது. இரண்டாவது பாதியில் பாட்னா அணி சவால் கொடுத்தது. முடிவில் போட்டி 29-29 என 'டை' ஆனது.