/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கொடி அறிமுகம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்கொடி அறிமுகம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
கொடி அறிமுகம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
கொடி அறிமுகம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
கொடி அறிமுகம்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூன் 26, 2024 10:55 PM

முதல் உலகப் போர் காரணமாக 1916ல் ஜெர்மனியின் பெர்லினில் நடக்க இருந்த ஆறாவது ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. ஏழாவது ஒலிம்பிக் போட்டி பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் (1920, ஆக. 14 - செப். 12) நடந்தது. இதில் சுமார் 29 நாடுகளை சேர்ந்த 2626 பேர் (2561 வீரர், 65 வீராங்கனைகள்) கலந்து கொண்டனர். 22 விளையாட்டுகளில் 162 பிரிவுகளில் பதக்கம் வழங்கப்பட்டது. முதல் உலகப் போரில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டன. இதையடுத்து ஜெர்மனி தனியாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.
ஐஸ் ஹாக்கி
ஆன்ட்வெர்ப் ஒலிம்பிக்கில், ஒரு வாரத்துக்கு குளிர்காலப் போட்டி நடத்தப்பட்டது சிறப்பம்சம். நடன 'ஸ்கேட்டிங்' பிரிவில் வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 'ஐஸ் ஹாக்கி' போட்டி முதல் முறையாக இடம் பெற்றது. தற்போது குளிர்கால போட்டிகளுக்கு என தனியாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.
அமைதி புறா
நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்றழைக்கப்பட்ட டிகோபர்டின் முயற்சியால் ஐந்து கண்டங்களை குறிக்கும் ஐந்து வளையம் கொண்ட ஒலிம்பிக் கொடி 1920ல் அறிமுகமானது. விளையாட்டு நட்சத்திரங்கள் உறுதிமொழி எடுத்து கொள்ளும் பழக்கமும், அமைதியை குறிக்கும் வகையில் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.
எக்ஸ்டிராஸ்
95 பதக்கம்
இப்போட்டியில் 41 தங்கம், 27 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை தட்டிச் சென்றது. அடுத்த இரு இடங்களை சுவீடன் (19 தங்கம், 20 வெள்ளி, 25 வெண்கலம்), பின்லாந்து (15 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம்) பிடித்தன. போட்டியை நடத்திய பெல்ஜியத்திற்கு (14 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம்) 5வது இடம் கிடைத்தது.