/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்புஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
ஹர்மன்பிரீத் சிங் கேப்டன்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
ADDED : ஜூன் 26, 2024 10:57 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள ஹாக்கி போட்டிக்கு இந்திய ஆண்கள் அணி தகுதி பெற்றது. இந்திய அணி 'பி' பிரிவில் நியூசிலாந்து (ஜூலை 27), அர்ஜென்டினா (ஜூலை 29), அயர்லாந்து (ஜூலை 30), பெல்ஜியம் (ஆக. 1), ஆஸ்திரேலியா (ஆக. 2) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர், ஒலிம்பிக்கில் 3வது முறையாக பங்கேற்க உள்ளார். கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், 'மிட்பீல்டர்' மன்பிரீத் சிங், 4வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாட உள்ளனர். ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், ராஜ் குமார் பால், அபிஷேக், சுக்ஜீத் சிங் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகினர்.
தில்பிரீத் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. நீலகண்ட சர்மா, கோல்கீப்பர் கிருஷ்ணன் பதக் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.
டோக்கியோவில் (2021) அசத்திய இந்தியா, 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கம் கிடைத்துள்ளன.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பர்), ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோகிதாஸ், சுமித், சஞ்சய், ராஜ்குமார் பால், ஷாம்சர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங்.
மாற்று வீரர்கள்: நீலகண்ட சர்மா, ஜுக்ராஜ் சிங், கிருஷ்ணன் பகதுார் பதக் (கோல்கீப்பர்).