ADDED : ஜூன் 10, 2024 10:52 PM

போர்ட்லாந்து: போர்ட்லாந்து தடகளத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தேசிய சாதனை படைத்தார்.
அமெரிக்காவில் போர்ட்லாந்து தடகளம் நடந்தது. இதில் அமெரிக்காவின் பல்வேறு ஒலிம்பிக் சாம்பியன், உலக சாதனையாளர்கள் களமிறங்குவர். 5000 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில், ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற குல்வீர் சிங் 26, பங்கேற்றார்.
போட்டி துாரத்தை 13 நிமிடம், 18.92 வினாடி நேரத்தில் கடந்து, இரண்டாவது இடம் பிடித்தார். தவிர இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2023ல் அவினாஷ் சபிள் 13:19.30 வினாடி நேரத்தில் கடந்தது இருந்தார். அமெரிக்க வீரர் ஜேக்கப்ஸ் (13:18.18) முதலிடம் பிடித்தார்.