/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சபாஷ் சாக் ஷி மாலிக்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்சபாஷ் சாக் ஷி மாலிக்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
சபாஷ் சாக் ஷி மாலிக்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
சபாஷ் சாக் ஷி மாலிக்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
சபாஷ் சாக் ஷி மாலிக்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 18, 2024 10:42 PM

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி (2016, ஆக. 5-21) நடந்தது. இது, தென் அமெரிக்காவில் நடந்த முதல் ஒலிம்பிக் போட்டியானது. இதில் 207 நாடுகளை சேர்ந்த 11,180 பேர் (6,146 வீரர், 5,034 வீராங்கனைகள்) பங்கேற்றனர். மொத்தம் 28 விளையாட்டுகள், 306 பிரிவுகளில் நடத்தப்பட்டன.
இந்தியா சார்பில் 117 பேர் (63 வீரர், 54 வீராங்கனைகள்) 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர். துவக்க விழாவில் நடந்த அணிவகுப்பில், பீஜிங் ஒலிம்பிக் (2008) 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா (துப்பாக்கி சுடுதல்), இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வந்தார். ஒலிம்பிக் பாட்மின்டனில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியரான சிந்து, பெண்கள் ஒற்றையரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய இளம் இந்தியரான இவர், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். தவிர இது, ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கமானது. ஏற்கனவே லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்தியாவின் செய்னா நேவல் வெண்கலம் வென்றிருந்தார்.
மல்யுத்த போட்டியில் அசத்திய இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் ('பிரீஸ்டைல்' 58 கிலோ) வெண்கலம் கைப்பற்றினார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார். இவர், நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வந்தார்
ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 67வது இடத்தை மங்கோலியாவுடன் பகிர்ந்து கொண்டது. அமெரிக்கா (46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம்) முதலிடத்தை தட்டிச் சென்றது. போட்டியை நடத்திய பிரேசிலுக்கு 13வது இடம் (7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம்) கிடைத்தது.