/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தடகள உறுப்பினர் நிஹாத் * உலக குத்துச்சண்டை அமைப்பில்...தடகள உறுப்பினர் நிஹாத் * உலக குத்துச்சண்டை அமைப்பில்...
தடகள உறுப்பினர் நிஹாத் * உலக குத்துச்சண்டை அமைப்பில்...
தடகள உறுப்பினர் நிஹாத் * உலக குத்துச்சண்டை அமைப்பில்...
தடகள உறுப்பினர் நிஹாத் * உலக குத்துச்சண்டை அமைப்பில்...
ADDED : செப் 15, 2025 10:08 PM

லிவர்பூல்: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியாவின் ஜாஸ்மின், மீனாட்சி தங்கப்பதக்கம் கைப்பற்றினர். தவிர நுபுர் வெள்ளி, பூஜா வெண்கலம் வசப்படுத்தினார். போட்டி முடிவில் குத்துச்சண்டை அமைப்பு சார்பில், புதியதாக உலக தடகள கமிட்டி அமைக்கப்பட்டது. உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
முடிவில் இந்தியா சார்பில் உலக சாம்பியன்ஷிப்பில் இரு தங்கம் வென்ற நிஹாத் ஜரீத் தேர்வானார். தவிர, ஆஸ்திரேலியாவின் கேட்லின் பார்க்கர், அமெரிக்காவின் ரிச்சர்டு உட்பட உலகின் 6 முன்னணி நட்சத்திரங்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
குத்துச்சண்டை நட்சத்திரங்களின் குறைகளை சரிசெய்ய முயற்சித்தல், போட்டியின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் இவர்களது பணியாகும். கடந்த 2024, டிசம்பரில் இந்தியாவின் லவ்லினா, இதுபோல உறுப்பினராக தேர்வானார்.