ADDED : ஜூலை 01, 2025 11:16 PM

புதுடில்லி: நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் 16 வயது வீராங்கனை தான்வி சர்மா, இரண்டாவது இடம் பிடித்தார். இதையடுத்து நேற்று வெளியான 'சீனியர்களுக்கான' தரவரிசை பட்டியலில் 30,160 புள்ளியுடன் 16 இடம் முன்னேறி, 50வது இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் சிந்து, 17வது இடம் பெற்றுள்ளார்.
ஜூனியர் அரங்கில் 14 தொடர்களில் பங்கேற்ற தான்வி, 19,730 புள்ளி பெற்று, ஒரு இடம் முன்னேறி, உலகின் 'நம்பர்-1' வீராங்கனை ஆனார். தாய்லாந்தின் அன்யாபாத் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தஸ்னிம் மிர், அனுபமாவுக்கு அடுத்து, 'நம்பர்-1' இடம் பிடித்த இந்தியாவின் மூன்றாவது ஜூனியர் வீராங்கனை ஆனார் தான்வி. ஆண்கள் பிரிவில் யு.எஸ்., ஓபன் கோப்பை வென்ற ஆயுஷ், 3 இடம் முந்தி, 31வது இடத்தில் உள்ளார்.