/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் ஆன்சி: கிராண்ட் பிரிக்ஸ் நீளம் தாண்டுதலில்...தங்கம் வென்றார் ஆன்சி: கிராண்ட் பிரிக்ஸ் நீளம் தாண்டுதலில்...
தங்கம் வென்றார் ஆன்சி: கிராண்ட் பிரிக்ஸ் நீளம் தாண்டுதலில்...
தங்கம் வென்றார் ஆன்சி: கிராண்ட் பிரிக்ஸ் நீளம் தாண்டுதலில்...
தங்கம் வென்றார் ஆன்சி: கிராண்ட் பிரிக்ஸ் நீளம் தாண்டுதலில்...
ADDED : ஜூன் 12, 2024 10:38 PM

பெங்களூரு: இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தின் நீளம் தாண்டுதலில் கேரளாவின் ஆன்சி தங்கம் வென்றார்.
பெங்களூருவில், இந்திய கிராண்ட் பிரிக்ஸ்-3 தடகளம் நடந்தது. பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் அதிகபட்சமாக 6.52 மீ., தாண்டிய கேரளாவின் ஆன்சி சோஜன் தங்கம் வென்றார். மற்றொரு கேரள வீராங்கனை நயனா ஜேம்ஸ் (6.48 மீ.,) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆந்திராவின் பவானி யாதவ் பகவத் (6.27 மீ.,) வெண்கலத்தை தட்டிச் சென்றார். தமிழகத்தின் புனிதா (5.99 மீ.,) 7வது இடம் பிடித்தார்.
அபினயா வெண்கலம்
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் தமிழகத்தின் அபினயா ராஜராஜன் (24.39 வினாடி) வெண்கலம் வென்றார். தெலுங்கானாவின் நித்யா காந்தே (24.23 வினாடி), கர்நாடகாவின் காவேரி (24.38 வினாடி) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உ.பி.,யின் சச்சின் யாதவ் (82.69 மீ.,), ரோகித் யாதவ் (75.52 மீ.,) முறையே தங்கம், வெண்கலத்தை தட்டிச் சென்றனர். இதில் சச்சின் யாதவ், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் ஆந்திராவின் ஜோதிகா ஸ்ரீ தண்டி (51.53 வினாடி), தமிழகத்தின் சுபா (52.34 வினாடி), கர்நாடகாவின் பூவம்மா (52.62 மீ.,) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.