/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அமித் பங்கல், ஜெய்ஸ்மின் தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டைக்குஅமித் பங்கல், ஜெய்ஸ்மின் தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டைக்கு
அமித் பங்கல், ஜெய்ஸ்மின் தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டைக்கு
அமித் பங்கல், ஜெய்ஸ்மின் தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டைக்கு
அமித் பங்கல், ஜெய்ஸ்மின் தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டைக்கு
ADDED : ஜூன் 02, 2024 11:10 PM

பாங்காக்: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டைக்கு இந்தியாவின் அமித் பங்கல், ஜெய்ஸ்மின் தகுதி பெற்றனர்.
தாய்லாந்தில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. ஆண்களுக்கான 51 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அமித் பங்கல், சீனாவின் சுவாங் லியு மோதினர். காமன்வெல்த் (2018ல் வெள்ளி, 2022ல் தங்கம்), ஆசிய விளையாட்டு (2022ல் தங்கம்), உலக சாம்பியன்ஷிப்பில் (2019ல் வெள்ளி) பதக்கம் வென்ற அமித் பங்கல் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஹரியானாவை சேர்ந்த இவர், இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) 'ரவுண்டு-16' சுற்றோடு திரும்பினார்.
பெண்களுக்கான 57 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா, மாலியின் மரைன் கமராவை வீழ்த்தினார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானார்.
ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு 'பிளே-ஆப்' போட்டியில், அரையிறுதியில் வீழ்ந்த இந்தியாவின் சச்சின் சிவாச், கிர்கிஸ்தானின் முனார்பெக் மோதினர். இதில் ஏமாற்றிய சச்சின் 0-5 என தோல்வியடைந்து ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியா சார்பில் 6 பேர் தகுதி பெற்றனர். ஏற்கனவே நிஷாந்த் தேவ் (71 கிலோ), நிகாத் ஜரீன் (50), பிரீத்தி பவார் (54), லவ்லினா (75) தகுதி பெற்றிருந்தனர்.