/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/அமெரிக்கா-பிரேசில் 'டிரா': நட்பு கால்பந்தில் 'விறுவிறு'அமெரிக்கா-பிரேசில் 'டிரா': நட்பு கால்பந்தில் 'விறுவிறு'
அமெரிக்கா-பிரேசில் 'டிரா': நட்பு கால்பந்தில் 'விறுவிறு'
அமெரிக்கா-பிரேசில் 'டிரா': நட்பு கால்பந்தில் 'விறுவிறு'
அமெரிக்கா-பிரேசில் 'டிரா': நட்பு கால்பந்தில் 'விறுவிறு'
ADDED : ஜூன் 13, 2024 10:31 PM

ஆர்லாண்டோ: அமெரிக்கா, பிரேசில் அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
அமெரிக்காவில், 'கோபா அமெரிக்கா' கால்பந்து 48வது சீசன் (ஜூன் 20 - ஜூலை 14) நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக நட்பு கால்பந்து போட்டி நடக்கிறது. அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் நடந்த போட்டியில் பிரேசில், அமெரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரேசிலின் ரோட்ரிகோ ஒரு கோல் அடித்தார். இதற்கு 26வது நிமிடத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் பொலிவியா, ஈகுவடார் அணிகள் மோதின. என்னர் வாலன்சியா (18வது நிமிடம்), ஜான் யெபோவா (25வது), ஜோர்டி சைசெடோ (70வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க ஈகுவடார் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பொலிவியா அணிக்கு மிகுயல் டெர்செரோஸ் (88வது) ஆறுதல் தந்தார்.