Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/'யூரோ' கோப்பை யாருக்கு: ஜெர்மனியில் கால்பந்து திருவிழா

'யூரோ' கோப்பை யாருக்கு: ஜெர்மனியில் கால்பந்து திருவிழா

'யூரோ' கோப்பை யாருக்கு: ஜெர்மனியில் கால்பந்து திருவிழா

'யூரோ' கோப்பை யாருக்கு: ஜெர்மனியில் கால்பந்து திருவிழா

ADDED : ஜூன் 13, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
முனிக்: 'யூரோ' கோப்பை கால்பந்து இன்று துவங்குகிறது. சொந்த மண்ணில் ஜெர்மனி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில், ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடரின் 17வது சீசன் இன்று துவங்குகிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இத்தாலி அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகிறது. ஜார்ஜியா அணி முதன்முறையாக இத்தொடரில் விளையாடுகிறது.

51 போட்டிகள்

மொத்தமுள்ள 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் (ஜூன் 14-26) பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் 12 அணிகள், மூன்றாவது இடம் பிடிக்கும் 'டாப்-4' அணிகள் என மொத்தம் 16 அணிகள் 'ரவுண்டு-16' சுற்றுக்கு (ஜூன் 29 - ஜூலை 2) தகுதி பெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதியில் (ஜூலை 5-6) பங்கேற்கும். அதன்பின் அரையிறுதி (ஜூலை 9, 10) நடத்தப்படும். இதில் வெல்லும் அணிகள் ஜூலை 14ல் பெர்லினில் நடக்கும் பைனலில் மோதும்.

பத்து மைதானம்

கடந்த முறை போல லீக், 'நாக்-அவுட்' என மொத்தம் 51 போட்டிகள் நடக்கும். இதற்கான போட்டிகள் பெர்லின், முனிக், டார்ட்மண்ட், ஹம்பர்க், ஸ்டட்கர்ட், பிராங்க்புரூட் உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்தப்படுகிறது.

ஆறு பிரிவு

'ஏ' பிரிவில் தொடரை நடத்தும் ஜெர்மனி, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் உள்ளன. 'நடப்பு சாம்பியன்' இத்தாலி, 'பி' பிரிவில் ஸ்பெயின், குரோஷியா, அல்பானியாவுடன் இடம் பெற்றுள்ளது. 'சி' பிரிவில் இங்கிலாந்து, டென்மார்க், சுலோவேனியா, செர்பியா, 'டி' பிரிவில் பிரான்ஸ், போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா அணிகள் உள்ளன. 'இ' பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ருமேனியா, உக்ரைன் இடம் பெற்றுள்ளன. போர்ச்சுகல் அணி, 'எப்' பிரிவில் துருக்கி, செக்குடியரசு, ஜார்ஜியாவுடன் உள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), எம்பாப்பே (பிரான்ஸ்), ஹாரி கேன் (இங்கிலாந்து), லுாகா மோட்ரிக் (குரோஷியா) உள்ளிட்ட முன்ணணி வீரர்கள் தங்கள் அணிக்கு கோப்பை வென்று தர முயற்சிக்கலாம்.

இன்று முனிக் நகரில் நடக்கும் முதல் போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள ஜெர்மனி, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

இதுவரை சாம்பியன்

'யூரோ' கால்பந்து வரலாற்றில் ஜெர்மனி (1972, 1980, 1996), ஸ்பெயின் (1964, 2008, 2012) அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை கோப்பை வென்றன. இத்தாலி (1968, 2020), பிரான்ஸ் (1984, 2000) தலா 2, ரஷ்யா (1960), செக்கோஸ்லோவாகியா (1976), நெதர்லாந்து (1988), டென்மார்க் (1992), கிரீஸ் (2004), போர்ச்சுகல் (2016) தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.



மூன்றாவது முறை

'யூரோ' கோப்பை போட்டிகள் மூன்றாவது முறையாக ஜெர்மனியில் நடக்கிறது. இதற்கு முன் 1988ல் மேற்கு ஜெர்மனியில் நடந்தது. கடந்த 2020 சீசனில், முனிக் நகரில் 4 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us