/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ஆஸ்திரியாவை வென்றது துருக்கி: யூரோ கோப்பை கால்பந்தில்ஆஸ்திரியாவை வென்றது துருக்கி: யூரோ கோப்பை கால்பந்தில்
ஆஸ்திரியாவை வென்றது துருக்கி: யூரோ கோப்பை கால்பந்தில்
ஆஸ்திரியாவை வென்றது துருக்கி: யூரோ கோப்பை கால்பந்தில்
ஆஸ்திரியாவை வென்றது துருக்கி: யூரோ கோப்பை கால்பந்தில்
ADDED : ஜூலை 03, 2024 10:36 PM

லெய்ப்ஜிக: 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதிக்கு துருக்கி அணி முன்னேறியது. 'ரவுண்டு-16' போட்டியில் 2-1 என ஆஸ்திரியாவை வென்றது.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) நடக்கிறது. இதன் 'ரவுண்டு-16' போட்டியில் ஆஸ்திரியா, துருக்கி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் துருக்கியின் மெரிஹ் டெமிரல் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஆஸ்திரிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் துருக்கி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய துருக்கி அணிக்கு 59வது நிமிடத்தில் டெமிரல் மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மைக்கேல் கிரிகோரிட்ச் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஆஸ்திரிய அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் துருக்கி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
அட்டவணை
'யூரோ' கோப்பை காலிறுதி அட்டவணை.
நாள் மோதும் அணிகள் இடம் நேரம்
ஜூலை 5 ஸ்பெயின் - ஜெர்மனி ஸ்டட்கர்ட் இரவு 9:30 மணி
ஜூலை 6 போர்ச்சுகல் - பிரான்ஸ் ஹம்பர்க் அதிகாலை 12:30 மணி
ஜூலை 6 இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து டசால்டர்ப் இரவு 9:30 மணி
ஜூலை 7 நெதர்லாந்து - துருக்கி பெர்லின் அதிகாலை 12:30 மணி