/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/தாமஸ் முல்லர் ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்துதாமஸ் முல்லர் ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்து
தாமஸ் முல்லர் ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்து
தாமஸ் முல்லர் ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்து
தாமஸ் முல்லர் ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்து
ADDED : ஜூலை 15, 2024 11:07 PM

முனிக்: ஜெர்மனியின் தாமஸ் முல்லர், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜெர்மனி கால்பந்து வீரர் தாமஸ் முல்லர் 34. உள்ளூர் போட்டியில் பேயர்ன் முனிக் அணிக்காக விளையாடுகிறார். முன்கள வீரரான இவர், 2010ல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஜெர்மனி சார்பில் 131 போட்டியில், 45 கோல் அடித்துள்ளார். நான்கு முறை உலக கோப்பை (2010, 2014, 2018, 2022, 19 போட்டியில் 10 கோல்), நான்கு முறை 'யூரோ' கோப்பை (2012, 2016, 2020, 2024) தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2014ல் உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணியில் இடம் பிடித்திருந்தார்.
சொந்த மண்ணில் நடந்த 'யூரோ' கோப்பையில் ஜெர்மனி அணி காலிறுதியோடு வெளியேறிய நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்த ஓய்வு பெறுவதாக தாமஸ் முல்லர் அறிவித்தார். கடைசியாக இவர், 'யூரோ' கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிரான காலிறுதியில் மாற்று வீரராக களமிறங்கினார்.
இதுகுறித்து தாமஸ் முல்லர் வெளியிட்ட கூறுகையில், ''ஜெர்மனிக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன். வெற்றி, தோல்விகளை சகவீரர்களுடன் பகிர்ந்து கொண்ட தருணம் என்றும் மறக்க முடியாதவை. எனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கும், ஒத்துழைப்பு அளித்த சகவீரர்களுக்கும், பயிற்சியாளர் குழுவினருக்கும் நன்றி,'' என்றார்.