/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/அர்ஜென்டினா-ஆஸி., மோதல் * கொச்சி 'நட்பு' கால்பந்தில்...அர்ஜென்டினா-ஆஸி., மோதல் * கொச்சி 'நட்பு' கால்பந்தில்...
அர்ஜென்டினா-ஆஸி., மோதல் * கொச்சி 'நட்பு' கால்பந்தில்...
அர்ஜென்டினா-ஆஸி., மோதல் * கொச்சி 'நட்பு' கால்பந்தில்...
அர்ஜென்டினா-ஆஸி., மோதல் * கொச்சி 'நட்பு' கால்பந்தில்...
ADDED : செப் 23, 2025 10:48 PM

திருவனந்தபுரம்: கொச்சியில் நடக்கவுள்ள நட்பு கால்பந்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத காத்திருக்கிறது.
உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது அர்ஜென்டினா (1978, 1986, 2022). இதையடுத்து கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அர்ஜென்டினா கால்பந்து நிர்வாகம் உறுதி செய்தது.
இதையடுத்து வரும் நவம்பர் 12 முதல் 18 வரையிலான ஏதாவது ஒரு தேதியில், கேரளாவின் கொச்சியில் இப்போட்டி நடக்க உள்ளது. தற்போது அர்ஜென்டினாவுடன் மோதவுள்ள எதிரணி குறித்து தெரியவந்துள்ளது. இதன்படி, உலகத் தரவரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள அர்ஜென்டினா அணி, 25வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவுடன், நட்பு போட்டியில் பங்கேற்கும் எனத் தெரியவந்துள்ளது.
போட்டி நடக்கும் இடம் குறித்து ஆய்வு செய்ய, அர்ஜென்டினா நிர்வாகத்தினர் இன்று கொச்சி வருகின்றனர்.
மீண்டும் வருகை
இப்போட்டிக்குப் பின், மெஸ்ஸி 38, வரும் டிசம்பரில் மீண்டும், இந்தியா வரவுள்ளார். கோல்கட்டா, ஆமதாபாத், மும்பை, டில்லி என நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.