/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/கால்பந்து: இந்தியா மீண்டும் வெற்றிகால்பந்து: இந்தியா மீண்டும் வெற்றி
கால்பந்து: இந்தியா மீண்டும் வெற்றி
கால்பந்து: இந்தியா மீண்டும் வெற்றி
கால்பந்து: இந்தியா மீண்டும் வெற்றி
ADDED : பிப் 24, 2024 09:45 PM

ஆலன்யா: துருக்கி கால்பந்து லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-0 என ஹாங்காங்கை வீழ்த்தியது.
துருக்கி சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நான்கு நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில் பங்கேற்கிறது. இதில் எஸ்தோனியா, ஹாங்காங், கொசோவா அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் எஸ்தோனியாவை வீழ்த்திய இந்தியா, இரண்டாவது போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் இந்தியாவின் அஞ்சு தமங் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஹாங்காங் வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய இந்திய அணிக்கு 80வது நிமிடத்தில் சவுமியா ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 2-0 என வெற்றி பெற்றது.
இதுவரை முடிந்த போட்டிகளில் முடிவில் கொசோவா, இந்தியா தலா 6 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளன. பிப். 27ல் நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்தியா, கொசோவா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி கோப்பை வெல்லும்.