/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/'யூரோ' கால்பந்து: காலிறுதியில் சுவிட்சர்லாந்து'யூரோ' கால்பந்து: காலிறுதியில் சுவிட்சர்லாந்து
'யூரோ' கால்பந்து: காலிறுதியில் சுவிட்சர்லாந்து
'யூரோ' கால்பந்து: காலிறுதியில் சுவிட்சர்லாந்து
'யூரோ' கால்பந்து: காலிறுதியில் சுவிட்சர்லாந்து
UPDATED : ஜூன் 30, 2024 01:11 AM
ADDED : ஜூன் 29, 2024 10:30 PM

பெர்லின்: 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதிக்கு சுவிட்சர்லாந்து முன்னேறியது. 'ரவுண்டு-16' போட்டியில் 2-0 என இத்தாலி அணியை வென்றது.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) தொடர் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில் நேற்று 'ரவுண்டு-16' சுற்று ஆரம்பமானது. பெர்லினில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் உலகின் 'நம்பர்-10' இத்தாலி அணி, 19வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 37 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரூபன் வர்காஸ் 'பாஸ்' செய்த பந்தில் ரெமோ புரூலர் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய 'நடப்பு சாம்பியன்' இத்தாலி அணியின் ஜியோவானி லாரன்சோ, ஸ்டீபன் எல் ஷாராவி, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தனர். முதல் பாதி முடிவில் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியின் 46வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரூபன் வர்காஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'நடப்பு சாம்பியன்' இத்தாலி பரிதாபமாக வெளியேறியது.