Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/உருகுவே கோல் மழை * பொலிவியாவை வீழ்த்தியது

உருகுவே கோல் மழை * பொலிவியாவை வீழ்த்தியது

உருகுவே கோல் மழை * பொலிவியாவை வீழ்த்தியது

உருகுவே கோல் மழை * பொலிவியாவை வீழ்த்தியது

ADDED : ஜூன் 28, 2024 10:32 PM


Google News
Latest Tamil News
நியூ ஜெர்சி: கோபா கால்பந்தில் கோல் மழை பொழிந்த உருகுவே அணி 5-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.

அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் உருகுவே, பொலிவியா அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் இருந்த உருகுவே வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 8வது நிமிடத்தில் உருகுவே வீரர் பெல்லிஸ்ட்ரி முதல் கோல் அடித்தார்.

21வது நிமிடம் அராவ்ஜோ கொடுத்த பந்தை பெற்ற, டார்வின் தன் பங்கிற்கு கோலாக மாற்ற, முதல் பாதியில் உருகுவே அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த உருகுவே அணிக்கு, 77வது நிமிடத்தில் மேக்ஸ்சிமில்லியானோ, நிகோலஸ் உதவியால் கோல் அடித்து கைகொடுத்தார். அடுத்த நான்காவது நிமிடத்தில் பெடெரிக்கோ (81 வது), ஒரு கோல் அடித்தார். போட்டி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன், ரோட்ரிகோ (89 வது) கோல் அடித்தார். முடிவில் உருகுவே அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உருகுவே அணி பங்கேற்ற 2 போட்டியிலும் வெற்றி பெற்று, 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பெற்று, காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

அமெரிக்க அணி ஏமாற்றம்

அட்லாண்டாவில் நடந்த போட்டியில் அமெரிக்கா ('நம்பர்-11'), 43வது இடத்திலுள்ள பனாமாவை எதிர்கொண்டது. 22வது நிமிடம் பாலோகன் ஒரு கோல் அடித்தார். பனாமா தரப்பில் பிளாக்மென் (26 வது), பஜார்டோ (83 வது) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் அமெரிக்க அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us