Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/குரோஷியா-அல்பேனியா 'டிரா'

குரோஷியா-அல்பேனியா 'டிரா'

குரோஷியா-அல்பேனியா 'டிரா'

குரோஷியா-அல்பேனியா 'டிரா'

ADDED : ஜூன் 19, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
ஹம்பர்க்: குரோஷியா, அல்பேனியா அணிகள் மோதிய 'யூரோ' கோப்பை கால்பந்து போட்டி 'டிரா' ஆனது.

ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-10' குரோஷிய அணி, 66வது இடத்தில் உள்ள அல்பேனியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஆசனி துாக்கி அடித்த பந்தை அல்பேனியாவின் லேசி தலையால் முட்டி கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அல்பேனியா 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட குரோஷிய அணிக்கு 74வது நிமிடத்தில் ஆன்ட்ரேஜ் கிராமரிக் ஒரு கோல் அடித்தார். பின் 76வது நிமிடத்தில் அல்பேனியாவின் கிளாஸ் ஜாசுலா 'சேம்சைடு' கோல் அடிக்க, குரோஷிய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இதற்கு, 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5வது நிமிடம்) கிளாஸ் ஜாசுலா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us