/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/உச்சம் தொட்ட உருகுவே * கோபா கால்பந்தில் அபாரம்உச்சம் தொட்ட உருகுவே * கோபா கால்பந்தில் அபாரம்
உச்சம் தொட்ட உருகுவே * கோபா கால்பந்தில் அபாரம்
உச்சம் தொட்ட உருகுவே * கோபா கால்பந்தில் அபாரம்
உச்சம் தொட்ட உருகுவே * கோபா கால்பந்தில் அபாரம்
ADDED : ஜூன் 24, 2024 10:22 PM

மயாமி: கோபா கால்பந்து லீக் போட்டியில் உருகுவே அணி 3-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தியது.
அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் உருகுவே, பனாமா அணிகள் மோதின. போட்டியின் 16வது நிமிடத்தில் உருகுவே வீரர் வின்னா கொடுத்த பந்தை பெற்ற அராவ்ஜோ, கோலாக மாற்றினார். முதல் பாதியில் உருகுவே 1-0 என முந்தியது.
போட்டியின் 85வது நிமிடத்தில் நுனெஸ் ஒரு கோல் அடித்து உருகுவே அணிக்கு உதவினார். இரண்டாவது பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+1 வது) டி லா கிரசிடம் இருந்து பந்தை வாங்கிய வின்னா, கோல் அடித்து அசத்தினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உருகுவே வீரர் லுாயிஸ் சாரஸ் 37, கடைசிவரை களமிறக்கப்படவில்லை. பனாமா அணிக்கு முரில்லோ (90+5வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் உருகுவே அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அமெரிக்கா அசத்தல்
நேற்று டெக்சாசில் நடந்த மற்றொரு 'சி' பிரிவு போட்டியில் அமெரிக்கா, பொலிவியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 3வது நிமிடத்தில் புலிசிக், 44வது நிமிடம் பாலோகன் என இருவரும் அமெரிக்க அணிக்கு தலா ஒரு கோல் அடித்தனர். அமெரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.