/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வாங்க கொண்டாடலாம்... * இந்திய கேப்டன் ரோகித் சர்மா அழைப்பு * 'உலகை' வென்ற வீரர்களை வரவேற்க 'ரெடி'வாங்க கொண்டாடலாம்... * இந்திய கேப்டன் ரோகித் சர்மா அழைப்பு * 'உலகை' வென்ற வீரர்களை வரவேற்க 'ரெடி'
வாங்க கொண்டாடலாம்... * இந்திய கேப்டன் ரோகித் சர்மா அழைப்பு * 'உலகை' வென்ற வீரர்களை வரவேற்க 'ரெடி'
வாங்க கொண்டாடலாம்... * இந்திய கேப்டன் ரோகித் சர்மா அழைப்பு * 'உலகை' வென்ற வீரர்களை வரவேற்க 'ரெடி'
வாங்க கொண்டாடலாம்... * இந்திய கேப்டன் ரோகித் சர்மா அழைப்பு * 'உலகை' வென்ற வீரர்களை வரவேற்க 'ரெடி'
ADDED : ஜூலை 03, 2024 11:21 PM

மும்பை: உலக கோப்பை வென்ற இந்திய அணியினர் இன்று மும்பையில் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலம் செல்ல உள்ளனர். வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடக்க உள்ளது.
வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது. பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை வென்றது. இந்த மகிழ்ச்சியில் இருந்த இந்திய வீரர்கள், பார்படாசில் ஏற்பட்ட 'பெரில்' புயல் காரணமாக, 3 நாள் ஓட்டலில் முடங்கினர்.
இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்திய வீரர்களை அழைத்துவர, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வானிலை சரியான நிலையில், நேற்று காலை 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி) விமானம் பார்படாஸ் சென்றது. அங்கிருந்து, மதியம் 2:20 மணிக்கு, இந்திய வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி, பயிற்சியாளர்கள், இந்திய பத்திரிகையாளர்கள் தனி விமானத்தில் கிளம்பினர். 16 மணி நேர பயணத்துக்குப் பின் இன்று காலை டில்லி விமான நிலையம் வருகின்றனர்.
பின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். மதியம் இந்திய வீரர்கள் மும்பை செல்கின்றனர். மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, இந்திய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக ('ரோடு ஷோ') செல்ல உள்ளனர். இரவில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடக்கும். பின் பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
முன்னதாக 2007ல் தோனி தலைமையில் இந்தியா முதன் முறையாக 'டி-20' உலக கோப்பை வென்ற போது, வீரர்கள் வெற்றி ஊர்வலம் நடந்தது.
ரசிகர்களுக்கு அழைப்பு
கேப்டன் ரோகித் சர்மா வெளியிட்ட செய்தியில்,'ஸ்பெஷலான தருணத்தை ரசிகர்களான உங்களுடன் கொண்டாட விரும்புகிறோம். மாலை 5:00 மணிக்கு நடக்கும் வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்க வாருங்கள்,' என தெரிவித்துள்ளார்.
விமானம் தாமதம் ஏன்
அமெரிக்காவின் நியூவார்க்கில் (நியூஜெர்சி) இருந்து ஏர் இந்தியா விமானம் ஜூலை 2ல் டில்லி கிளம்ப இருந்தது. மறுபக்கம் புயல் கரை கடந்த நிலையில் சாம்பியன் வீரர்கள் தாயகம் திரும்ப காத்திருந்தனர். இதுகுறித்து பெரும்பாலான பயணிகளிடம் முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அனுமதியுடன் விமானம் பார்படாஸ் சென்றது. பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதம் குறித்து, விமான போக்குவரத்து துறை இயக்குனர் சார்பில், ஏர் இந்தியா நிறுவனத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
பிரதமருடன் சந்திப்பு
இந்திய அணியினர், பிரதமர் மோடியை, இன்று காலை 11:00 மணிக்கு, அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளனர். அப்போது உலக கோப்பையை வழங்கி, வாழ்த்து பெறவுள்ளனர்.