/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'சூப்பர்-8' சுற்றில் வங்கதேசம் * நேபாளத்தை வீழ்த்தியது'சூப்பர்-8' சுற்றில் வங்கதேசம் * நேபாளத்தை வீழ்த்தியது
'சூப்பர்-8' சுற்றில் வங்கதேசம் * நேபாளத்தை வீழ்த்தியது
'சூப்பர்-8' சுற்றில் வங்கதேசம் * நேபாளத்தை வீழ்த்தியது
'சூப்பர்-8' சுற்றில் வங்கதேசம் * நேபாளத்தை வீழ்த்தியது
ADDED : ஜூன் 17, 2024 10:53 PM

கிங்ஸ்டவுன்: 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' சுற்றுக்கு கடைசி அணியாக முன்னேறியது வங்கதேசம். நேற்று நேபாளத்தை 21 ரன்னில் வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீசின் கிங்ஸ்டவுனில் நடந்த லீக் போட்டியில் வங்கதேசம், நேபாளம் மோதின. 'டாஸ்' வென்ற நேபாளம் பீல்டிங் தேர்வு செய்தது.
வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் தன்ஜித் (0), லிட்டன் தாஸ் (10) என இருவரையும், சோம்பால் அவுட்டாக்கினார். திபேந்திரா 'வேகத்தில்' கேப்டன் ஷாண்டோ (4) போல்டானார். ரோகித் பந்துகளில் சாகிப் அல் ஹசன் (17), தவ்ஹித் (9) வீழ்ந்தனர். மகமதுல்லா (13) ரன் அவுட்டானார். ஜேக்கர் (12), ரிஷாத் (13) ஏமாற்றினர்.
வங்கதேச அணி 19.3 ஓவரில் 106 ரன்னுக்கு சுருண்டது. நேபாளத்தின் சார்பில் சோம்பால், திபேந்திரா, ரோகித் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எளிய இலக்கைத் துரத்திய நேபாள அணி துவக்கத்திலேயே சரிந்தது. குஷால் (4), அனில் ஷா (0), ரோகித் பவுடல் (1), ஜோரா (1) ஒற்றை இலக்க ரன்னில் திரும்ப, ஆஷிப் (17) ஆறுதல் தந்தார். ஒருகட்டத்தில் 26/5 ரன் என திணறிய நேபாளம், பின் 78/5 என மீண்டது. பின் வரிசையில் குஷால் மல்லா (27), திபேந்திரா (25) போராடிய போதும், மற்றவர்கள் கைவிட்டனர்.
கடைசி 7 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்த, நேபாள அணி 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. தன்ஜிம் 4, முஸ்தபிஜூர் 3 விக்கெட் சாய்த்தனர். வங்கதேச அணி 4 போட்டியில் 3 வெற்றியுடன் (1 தோல்வி) 6 புள்ளி பெற்று, இத்தொடரின் 'சூப்பர்-8' சுற்றுக்கு, கடைசி அணியாக முன்னேறியது.
106
'டி-20' உலக கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்து குறைந்த ஸ்கோர் எடுத்து, வெற்றி பெற்ற அணியானது வங்கதேசம். நேற்று முதலில் 106 ரன் எடுத்த வங்கதேசம், நேபாளத்தை 85 ரன்னில் சுருட்டியது. முன்னதாக இத்தொடரில் தென் ஆப்ரிக்க அணி 113 ரன் எடுத்து (வங்கதேசம் 109) வெற்றி பெற்றது.