/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது மும்பை நியூயார்க்சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது மும்பை நியூயார்க்
சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது மும்பை நியூயார்க்
சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது மும்பை நியூயார்க்
சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது மும்பை நியூயார்க்
ADDED : ஜூலை 15, 2024 11:04 PM

டல்லாஸ்: எம்.எல்.எஸ்., தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்னில், மும்பை நியூயார்க்கை வென்றது.
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் உட்பட 6 அணிகள் மோதுகின்றன. நேற்று டல்லாசில் நடந்த லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை நியூயார்க் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
டுபிளசி கலக்கல்
டெக்சாஸ் அணிக்கு கேப்டன் டுபிளசி (61), கான்வே (40) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஹார்டி 22 ரன் எடுத்தார். 20 ஓவரில் டெக்சாஸ் அணி 176/6 ரன் எடுத்தது. , பிராவோ (7), (24) அவுட்டாகாமல் இருந்தனர். பவுல்ட் 2, ரஷித் கான் 1 விக்கெட் சாய்த்தனர்.
ரஷித் விளாசல்
அடுத்து களமிறங்கிய நியூயார்க் அணிக்கு கேப்டன் போலார்டு (5), டேவிட் (6), பூரன் (1) உள்ளிட்டோர் ஏமாற்றம் தந்தனர். மோனங்க் படேல் (61), ரஷித் கான் (50) போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை. நியூயார்க் அணி 20 ஓவரில் 161/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்டாய்னிஸ் 4 விக்கெட் சாய்த்தார்.