/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஒரு ரன்னில் தென் ஆப்ரிக்கா வெற்றி: கடைசி பந்தில் வீழ்ந்தது நேபாளம்ஒரு ரன்னில் தென் ஆப்ரிக்கா வெற்றி: கடைசி பந்தில் வீழ்ந்தது நேபாளம்
ஒரு ரன்னில் தென் ஆப்ரிக்கா வெற்றி: கடைசி பந்தில் வீழ்ந்தது நேபாளம்
ஒரு ரன்னில் தென் ஆப்ரிக்கா வெற்றி: கடைசி பந்தில் வீழ்ந்தது நேபாளம்
ஒரு ரன்னில் தென் ஆப்ரிக்கா வெற்றி: கடைசி பந்தில் வீழ்ந்தது நேபாளம்
ADDED : ஜூன் 15, 2024 11:45 PM

கிங்ஸ்டவுன்: கடைசி பந்தில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் கிங்ஸ்டவுனில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, நேபாளம் அணிகள் மோதின. தென் ஆப்ரிக்கா ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நேபாளம், 'டாஸ்' வென்ற 'பீல்டிங்' தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (10), கேப்டன் மார்க்ரம் (15) சோபிக்கவில்லை. கிளாசன் (3), டேவிட் மில்லர் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ரீசா ஹென்டிரிக்ஸ் (43), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (27*) கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்தது. நேபாளம் சார்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நேபாளம் அணிக்கு ஆசிப் ஷேக் (42), அனில் சா (27) கைகொடுக்க, 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. பார்ட்மன் பந்துவீசினார். முதலிரண்டு பந்தை வீணடித்த குல்ஷன் ஜா, அடுத்த 3 பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட, குல்ஷன் (6) 'ரன்-அவுட்' ஆனார்.
நேபாளம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 114 ரன் மட்டும் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஷாம்சி 4 விக்கெட் சாய்த்தார்.