
பாபருக்கு சவால்
ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பேசிக் கொள்வதில்லை. ஒவ்வொரு குழுவின் தலைவரையும் சமதானம் செய்யும் பணியில் சில வீரர்கள் ஈடுபட்டனர். முகமது ஆமிர், இமாத் வாசிம் போன்ற 'சீனியர்' வீரர்களின் வரவு குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்தியது. சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத இவர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க இயலாது. அணியை ஒருங்கிணைப்பதே பாபருக்கு பெரும் சவாலாக உள்ளது.
பலன் இல்லை
உலக கோப்பை தொடருக்கு முன்பே பாகிஸ்தான் வீரர்கள் மத்தியில் பிளவு இருப்பது பி.சி.பி., தலைவர் மொசின் நக்விக்கு தெரியும். இரு முறை வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு. உலக கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இவரது ஆலோசனைக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
'தல' தப்புமா
உலக கோப்பை தோல்விக்கு கேப்டன் தான் 'பலிகடா' ஆக்கப்படுவார். இம்முறை பாபர் பதவி உடனடியாக பறிக்கப்படுவது சந்தேகம். ஒட்டுமொத்த அணியையும் மாற்றி அமைக்க வேண்டும். பி.சி.பி., தலைவர் மொசின் கானுக்கும் எதிர்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணியிலும் நிர்வாகித்திலும் பெரிய மாற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.