Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தென் ஆப்ரிக்க அணியை மறக்க முடியுமா: உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில்

தென் ஆப்ரிக்க அணியை மறக்க முடியுமா: உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில்

தென் ஆப்ரிக்க அணியை மறக்க முடியுமா: உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில்

தென் ஆப்ரிக்க அணியை மறக்க முடியுமா: உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில்

UPDATED : ஜூன் 14, 2025 11:14 PMADDED : ஜூன் 14, 2025 05:17 PM


Google News
Latest Tamil News
லார்ட்ஸ்: ஐ.சி.சி., தொடரில் தென் ஆப்ரிக்கா தொடர்ந்து சொதப்பியதால், 'சோக்கர்ஸ்' என கேலி செய்தனர். இதை மாற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நேற்று பெற்றது.

தென் ஆப்ரிக்காவின் சில அதிர்ச்சி தோல்விகள்.

1) 1992 உலக கோப்பை-அரையிறுதி, எதிர்: இங்கிலாந்து, இடம்: சிட்னி

தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 13 பந்தில், 22 ரன் தேவைப்பட்டது. பிரையன் மெக்மில்லன், டேவிட் ரிச்சர்ட்சன் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட, 1 பந்தில், 22 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. சர்ச்சைக்குரிய மழை விதிமுறையால் தென் ஆப்ரிக்க அணி தோற்றது.

2) 1999 உலக கோப்பை-அரையிறுதி, எதிர்: ஆஸ்திரேலியா, இடம்: பர்மிங்ஹாம்ஒரு விக்கெட் மீதமுள்ள நிலையில் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன் தேவை. ஆஸ்திரேலியாவின் டேமியன் பிளமிங் பந்துவீசினார். முதலிரண்டு பந்தை குளூஸ்னர் பவுண்டரிக்கு அனுப்ப, 4 பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. மூன்றாவது பந்து வீணானது. நான்காவது பந்தில் ஆலன் டொனால்டு 'ரன்-அவுட்' ஆக, போட்டி 'டை' ஆனது. 'சூப்பர்-6' போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியா பைனலுக்கு தகுதி பெற்றது.

3) 2003 உலக கோப்பை-லீக் சுற்று, எதிர்: இலங்கை, இடம்: டர்பன்தென் ஆப்ரிக்க அணி 45 ஓவரில், 229/6 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நீடித்ததால் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் போட்டி 'டை' என அறிவிக்கப்பட்டது. இலங்கையின் முரளிதரன் வீசிய 45வது ஓவரின் 5வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர், கடைசி பந்தில் ரன் எடுக்கவில்லை. ஒருவேளை ஒரு ரன் எடுத்திருந்தால் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றிருக்கும். புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'சூப்பர்-6' வாய்ப்பை இழந்தது.

4) 2015 உலக கோப்பை-அரையிறுதி, எதிர்: நியூசிலாந்து, இடம்: ஆக்லாந்துநியூசிலாந்தின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 5 ரன் தேவைப்பட்டன. ஸ்டைன் வீசிய 5வது பந்தை நியூசிலாந்து வீரர் எலியாட் சிக்சருக்கு அனுப்ப, தென் ஆப்ரிக்காவின் பைனல் கனவு தகர்ந்தது.

5) 2022 'டி-20' உலக கோப்பை-'சூப்பர் 12', எதிர்: நெதர்லாந்து, இடம்: அடிலெய்டுஅரையிறுதிக்கு முன்னேற நெர்தர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஆனால் 159 ரன்னை 'சேஸ்' செய்ய தவறிய தென் ஆப்ரிக்கா, 13 ரன்னில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.

6) 2024 'டி-20' உலக கோப்பை-பைனல், எதிர்: இந்தியா, இடம்: பிரிட்ஜ்டவுன்தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 29 பந்தில், 26 ரன் தேவைப்பட்டது. 'வேகத்தில்' மிரட்டிய இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, அபாயகரமான கிளாசனை (52) வெளியேற்றினார். கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட, 8 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார் பாண்ட்யா. தென் ஆப்ரிக்காவின் கோப்பை கனவு தகர்ந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us