Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சுதர்சனுக்கு 'சூப்பர்' வாய்ப்பு * டபிள்யு.வி.ராமன் கணிப்பு

சுதர்சனுக்கு 'சூப்பர்' வாய்ப்பு * டபிள்யு.வி.ராமன் கணிப்பு

சுதர்சனுக்கு 'சூப்பர்' வாய்ப்பு * டபிள்யு.வி.ராமன் கணிப்பு

சுதர்சனுக்கு 'சூப்பர்' வாய்ப்பு * டபிள்யு.வி.ராமன் கணிப்பு

UPDATED : ஜூன் 14, 2025 04:03 PMADDED : ஜூன் 13, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என டபிள்யு.வி.ராமன் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் டென் சானல்களில் காணலாம். தமிழில் வர்ணனை செய்யவுள்ள, இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன் அளித்த பேட்டி:

* டெஸ்ட் தொடர், புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு சுப ஆரம்பமாக இருக்குமா அல்லது இங்கிலாந்து சூழ்நிலை சவாலாக அமையுமா?

இங்கிலாந்து ஆடுகளம், சூழ்நிலை சவாலாக அமையும். இருப்பினும் நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்புவோம்.

* அஷ்வின் போன்ற அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில், வாஷிங்டன், குல்தீப், ஜடேஜாவை வைத்து இந்திய அணி சமாளிக்குமா?

இங்கிலாந்து ஆடுகளங்கள் 'வேகத்துக்கு' சாதகமானவை. 'வேகங்கள்' தான் இந்திய அணிக்கு கைகொடுக்க வேண்டும். லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கூட வேகப்பந்துவீச்சாளர்கள் தான் மிரட்டுகின்றனர். தற்போது அணியில் உள்ள 'ஸ்பின்னர்'களை வைத்து இந்திய அணி சமாளிக்கும்.

* ரோகித், கோலி என 'சீனியர்' வீரர்களின் ஓய்வு, சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பாக அமையுமா?

சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் போது, புதிய நட்சத்திர வீரர்களை கண்டறியலாம். சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களுக்கு, தற்போது 'சூப்பர்' வாய்ப்பு வந்துள்ளது. இதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

* இந்திய 'லெவன்' அணியில் சாய் சுதர்சன் இடம் பிடித்தால், துவக்க வீரராக வரலாமா அல்லது 3வது இடத்தில் களமிறங்கலாமா?

சாய் சுதர்சனுக்கு 3வது இடம் பொருத்தமாக இருக்கும். அப்போது சுப்மன் கில் 4வது இடத்தில் வரவேண்டியது இருக்கும். இதனால் சுதர்சன் துவக்கம் தரலாம். அணியின் பேட்டிங் வரிசைக்கு ஏற்ப, மாற்றம் இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us