Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நமீபியாவை வென்றது ஸ்காட்லாந்து

நமீபியாவை வென்றது ஸ்காட்லாந்து

நமீபியாவை வென்றது ஸ்காட்லாந்து

நமீபியாவை வென்றது ஸ்காட்லாந்து

ADDED : ஜூன் 07, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
பிரிட்ஜ்டவுன்: ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நமீபிய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (52), ஜேன் கீரீன் (28), நிகோலாஸ் டேவின் (20) நம்பிக்கை தந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் சாய்த்தார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து அணிக்கு மைக்கேல் ஜோன்ஸ் (26), மைக்கேல் லீஸ்க் (35) கைகொடுத்தனர். டேவிட் வைஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் பெர்ரிங்டன் வெற்றியை உறுதி செய்தார். ஸ்காட்லாந்து அணி 18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெர்ரிங்டன் (47), கிறிஸ் கிரீவ்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்காட்லாந்து அணி 3 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (2 புள்ளி), நமீபியா (2), இங்கிலாந்து (1) உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us