/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
UPDATED : ஜூலை 14, 2024 11:31 PM
ADDED : ஜூலை 14, 2024 11:13 PM

கோவை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம், திண்டுக்கல் அணிகள் தோல்வியடைந்து ஏமாற்றின.
டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சேலம், திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
திருச்சி அணிக்கு அர்ஜுன் மூர்த்தி (11), வாசீம் அகமது (19), சியாம் சுந்தர் (19) சுமாரான துவக்கம் கொடுத்தனர். ஜாபர் ஜமால் (32) கைகொடுத்தார். அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 26 பந்தில் அரைசதம் கடந்தார். ஹரிஸ் குமார் வீசிய 18வது ஓவரில் மூன்று சிக்சர் பறக்கவிட்ட சஞ்சய் (68), பொய்யாமொழி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ராஜ்குமார் (18*), சரவண குமார் (17*) ஓரளவு ரன் சேர்த்தனர்.
திருச்சி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட் கைப்பற்றினார்.
கடின இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு கவின் (13), அபிஷேக் (10), கேப்டன் ஷிஜித் சந்திரன் (6), விஷால் வைத்யா (10) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய விவேக், 10 பந்தில் 33 ரன் (4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசினார். முகமது அட்னான் கான் (40) ஓரளவு கைகொடுத்தார். ஹரிஷ் குமார் (15) 'ரன்-அவுட்' ஆனார். சன்னி சந்து (29) ஆறுதல் தந்தார். சேலம் அணி 18.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 3 விக்கெட் சாய்த்தார்.