ADDED : ஜூன் 17, 2024 12:07 AM

லாடர்ஹில்: பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 'சூப்பர்-8' வாய்ப்பை இழந்தன. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் 'பீல்டிங்' தேர்வு செய்தது.
அயர்லாந்து அணிக்கு பால்பிர்னி (0), லார்கன் டக்கர் (2), ஹாரி டெக்டர் (0), கேப்டன் ஸ்டிர்லிங் (1), ஜார்ஜ் டாக்ரெல் (11), கர்டிஸ் கேம்பர் (7) ஏமாற்றினர். அயர்லாந்து அணி 32 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. கரேத் டெலானி (31), ஜோஷ் லிட்டில் (22*), மார்க் அடைர் (15) ஆறுதல் தந்தனர். அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் அப்ரிதி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் (17), சைம் அயுப் (17) சோபிக்கவில்லை. பகார் ஜமான் (5), உஸ்மான் கான் (2), ஷதாப் கான் (0), இமாத் வாசிம் (4) ஏமாற்றினர். அபாஸ் அப்ரிதி (17) ஆறுதல் தந்தார். டெலானி வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட ஷாகீன் அப்ரிதி வெற்றியை உறுதி செய்தார்.
பாகிஸ்தான் அணி 18.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து 'டென்ஷன்' வெற்றி பெற்றது. பாபர் (32), ஷாகீன் அப்ரிதி (13) அவுட்டாகாமல் இருந்தனர்.