/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நியூசிலாந்து வீரர் ஆலன் சாதனை: கெய்லை முந்தினார்நியூசிலாந்து வீரர் ஆலன் சாதனை: கெய்லை முந்தினார்
நியூசிலாந்து வீரர் ஆலன் சாதனை: கெய்லை முந்தினார்
நியூசிலாந்து வீரர் ஆலன் சாதனை: கெய்லை முந்தினார்
நியூசிலாந்து வீரர் ஆலன் சாதனை: கெய்லை முந்தினார்
ADDED : ஜூன் 13, 2025 11:21 PM

ஓக்லாண்ட்: அமெரிக்காவில், மேஜர் லீக் கிரிக்கெட் ('டி-20') 3வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ அணி (269/5), 123 ரன் வித்தியாசத்தில் வாஷிங்டன் அணியை (146/10, 13.1 ஓவர்) வீழ்த்தியது. பேட்டிங்கில் அசத்திய பிரான்சிஸ்கோ அணியின் நியூசிலாந்து வீரர் பின் ஆலன், 51 பந்தில், 19 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 151 ரன் குவித்தார்.
'டி-20' அரங்கில் ஆலன் படைத்த சாதனை விபரம்:
* ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (ரங்க்பூர் அணி, 2017, எதிர்: தாகா), எஸ்டோனியாவின் சாஹில் சவுகானை (2024, எதிர்: சைப்ரஸ்) முந்தி (தலா 18 சிக்சர்) முதலிடம் பிடித்தார் ஆலன் (19).
* குறைந்த பந்தில் 150 ரன்னை எட்டிய வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் பிரவிசை (52 பந்து, டைட்டன்ஸ் அணி, 2022, எதிர்: நைட்ஸ் அணி) முந்தினார் ஆலன் (49 பந்து).
* மேஜர் லீக் அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரரானார் ஆலன் (151). இதற்கு முன், நியூயார்க் அணிக்காக வெஸ்ட் இண்டீசின் நிக்கோலஸ் பூரன் (2023 பைனல், எதிர்: சியாட்டில்) 137* ரன் எடுத்திருந்தார்.
* மேஜர் லீக் வரலாற்றில் அதிவேக சதம் (34 பந்து) விளாசிய வீரரானார் ஆலன். இதற்கு முன் பூரன் 40 பந்தில் சதமடித்திருந்தார்.
* சிக்சர், பவுண்டரி மூலம் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார் ஆலன் (114 ரன், 19x6, 5x4). முதல் மூன்று இடங்களில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (154 ரன்), ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜஜாய் (140), இங்கிலாந்தின் கிரஹாம் நேப்பியர் (136) உள்ளனர்.