Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'நெருப்பா' பும்ரா...சிறப்பா இந்தியா: கடைசி ஓவரில் வீழ்ந்தது பாகிஸ்தான்

'நெருப்பா' பும்ரா...சிறப்பா இந்தியா: கடைசி ஓவரில் வீழ்ந்தது பாகிஸ்தான்

'நெருப்பா' பும்ரா...சிறப்பா இந்தியா: கடைசி ஓவரில் வீழ்ந்தது பாகிஸ்தான்

'நெருப்பா' பும்ரா...சிறப்பா இந்தியா: கடைசி ஓவரில் வீழ்ந்தது பாகிஸ்தான்

UPDATED : ஜூன் 10, 2024 01:48 AMADDED : ஜூன் 10, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நியூயார்க்: உலக கோப்பை லீக் போட்டியில் பும்ரா 'வேகத்தில்' மிரட்ட, இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 120 ரன்களை விரட்டிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரில் வீழ்ந்தது.

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நியூயார்க் எய்சன்ஹவர் பார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் போட்டி 50 நிமிடம் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பன்ட் நம்பிக்கை

இந்திய அணிக்கு கோலி (4), கேப்டன் ரோகித் (13) சுமாரான துவக்கம் கொடுத்தனர்.பின் இணைந்த ரிஷாப் பன்ட், அக்சர் படேல் ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. ஷாகீன்ஷா அப்ரிதிவீசிய 5வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் அக்சர். முகமது ஆமிர் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார் பன்ட். மூன்றாவது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்த போது நசீம் ஷா பந்தில் அக்சர் (20) போல்டானார்.பொறுப்பாக ஆடிய ரிஷாப் பன்ட், ஹாரிஸ் ராப் வீசிய 10வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். சூர்யகுமார் (7), ஷிவம் துபே (3) ஏமாற்றினர். முகமது ஆமிர் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்தில் பன்ட் (42), ஜடேஜா (0) 'பெவிலியன்' திரும்பினர். ஹர்திக் பாண்ட்யா (7), பும்ரா (0), அர்ஷ்தீப் சிங் (9) சோபிக்கவில்லை.

இந்திய அணி 19ஓவரில்119 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.சிராஜ் (7)அவுட்டாகாமல் இருந்தார்.

பும்ரா அசத்தல்

சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. கணிக்க முடியாத நியூயார்க் ஆடுகளத்தில் ரன் எடுக்க முடியாமல் திணறியது. முதல் விக்கெட்டுக்கு 26 ரன் சேர்த்த போது பும்ரா 'வேகத்தில்' பாபார் (13) வெளியேறினார். உஸ்மான் கான் (13), பகர் ஜமான் (13) சோபிக்கவில்லை. தொடர்ந்து மிரட்டிய பும்ரா பந்தில் முகமது ரிஸ்வான் (31) அவுட்டானார். ஷதாப் கான் (4), இப்திகார் அகமது (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார். முதல் பந்தில் இமாத் வாசிம் (15) அவுட்டானார். அடுத்த 5 பந்தில் 11 ரன் மட்டும் கிடைத்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 113 ரன் எடுத்து தோல்வியடைந்தது. நசீம் (10) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட் சாய்த்தார்.

119 ரன்

'டி-20' உலக கோப்பை அரங்கில் இந்திய அணி (119/10) தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக 79 ரன்னுக்கு (2016, இடம்: நாக்பூர்) சுருண்டது.

38 ரன்னுக்கு 7 விக்.,

இந்திய அணி 10 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 81 ரன் எடுத்திருந்தது. அடுத்த 38 ரன்னுக்கு, எஞ்சிய 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 119 ரன்னுக்கு சுருண்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us