/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நேபாளம் முதல் வெற்றி: சம்ஜானா அரைசதம் விளாசல்நேபாளம் முதல் வெற்றி: சம்ஜானா அரைசதம் விளாசல்
நேபாளம் முதல் வெற்றி: சம்ஜானா அரைசதம் விளாசல்
நேபாளம் முதல் வெற்றி: சம்ஜானா அரைசதம் விளாசல்
நேபாளம் முதல் வெற்றி: சம்ஜானா அரைசதம் விளாசல்
ADDED : ஜூலை 19, 2024 10:06 PM

தம்புலா: சம்ஜானா அரைசதம் விளாச நேபாள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது.
தம்புலாவில் நடந்த பெண்களுக்கான ஆசிய கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நேபாளம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. குஷி சர்மா (36), கவிஷா (22) கைகொடுக்க யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்தது. நேபாளம் சார்பில் இந்து பர்மா 3 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நேபாளம் அணிக்கு சீதா ராணா மகர் (7), கபிதா குன்வர் (2), கேப்டன் இந்து பர்மா (6) ஏமாற்றினர். தனிநபராக அசத்திய சம்ஜானா கட்கா, 35 பந்தில் அரைசதம் எட்டினார். ஈஷா ஓசா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சம்ஜானா வெற்றியை உறுதி செய்தார்.
நேபாளம் அணி 16.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சம்ஜானா (72 ரன், 11 பவுண்டரி), பூஜா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதன்முறை
இதன்மூலம் நேபாள அணி, ஆசிய கோப்பை அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய 9 போட்டியில், ஒரு வெற்றி, 8 தோல்வியை பெற்றது. ஆசிய கோப்பையில் அரைசதம் விளாசிய முதல் நேபாள வீராங்கனையானார் சம்ஜானா. இதற்கு முன் ஜோதி பாண்டே, இரு முறை தலா 16 ரன் (எதிர்: இலங்கை, தாய்லாந்து, 2016) எடுத்தது அதிகபட்சம்.