/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணிக்கு ஜாம்பவான்கள் பாராட்டுஇந்திய அணிக்கு ஜாம்பவான்கள் பாராட்டு
இந்திய அணிக்கு ஜாம்பவான்கள் பாராட்டு
இந்திய அணிக்கு ஜாம்பவான்கள் பாராட்டு
இந்திய அணிக்கு ஜாம்பவான்கள் பாராட்டு

கபில், தோனி வரிசையில்...
இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத்தந்த கேப்டன்கள் வரிசையில் கபில்தேவ், தோனியுடன் இணைந்தார் ரோகித். 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலக சாம்பியன் (50 ஓவர்) ஆனது. பின், 2007 ('டி-20'), 2011ல் (50 ஓவர்) தோனி வழிநடத்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வென்றது.
பத்து பட்டம்
ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான வரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இதுவரை, 50 ஓவர் உலக கோப்பை 6 (1987, 1999, 2003, 2007, 2015, 2023), சாம்பியன்ஸ் டிராபி 2 (2006, 2009), 'டி-20' உலக கோப்பை (2021), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023) தலா ஒரு முறை என 10 பட்டம் வென்றுள்ளது. அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பை 2 (1983, 2011), சாம்பியன்ஸ் டிராபி 2 (2002, 2013), 'டி-20' உலக கோப்பை 2 (2007, 2024) என 6 முறை சாம்பியன் ஆனது.