/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜோர்டான் 'ஹாட்ரிக்': இங்கிலாந்து வெற்றிஜோர்டான் 'ஹாட்ரிக்': இங்கிலாந்து வெற்றி
ஜோர்டான் 'ஹாட்ரிக்': இங்கிலாந்து வெற்றி
ஜோர்டான் 'ஹாட்ரிக்': இங்கிலாந்து வெற்றி
ஜோர்டான் 'ஹாட்ரிக்': இங்கிலாந்து வெற்றி
UPDATED : ஜூன் 23, 2024 11:44 PM
ADDED : ஜூன் 23, 2024 11:43 PM

பிரிட்ஜ்டவுன்: ஜோர்டான், பட்லர் கைகொடுக்க இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் ('பிரிவு-2') அமெரிக்கா, 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து 'பீல்டிங்' தேர்வு செய்தது.
அமெரிக்க அணிக்கு ஆன்ட்ரிஸ் கவுஸ் (8), ஸ்டீவன் டெய்லர் (12), கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் (10), மிலிந்து குமார் (4) சோபிக்கவில்லை. நிதிஷ் குமார் (30), ஹர்மீத் சிங் (21), கோரி ஆண்டர்சன் (29) ஓரளவு கைகொடுத்தனர். 19வது ஓவரில் அலி கான், நோஸ்துஷ், சவுரப் நேத்ரவால்கரை வரிசையாக 'டக்-அவுட்' செய்த ஜோர்டான் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அமெரிக்க அணி 18.5 ஓவரில் 115 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பட்லர், பில் சால்ட் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஹர்மீத் சிங் வீசிய 9வது ஓவரில் வரிசையாக 5 சிக்சர் பறக்கவிட்ட பட்லர், 32 பந்தில் அரைசதம் கடந்தார். ஷாட்லி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பட்லர் வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பட்லர் (83), சால்ட் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் வீரர்
சர்வதேச 'டி-20' அரங்கில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து பவுலரானார் ஜோர்டான். தவிர இவர், 'டி-20' உலக கோப்பையில் இச்சாதனை படைத்த 8வது பவுலரானார்.